நோபல் பரிசு : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு..!
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை இந்த ஆண்டிற்கான அமைதி, மருத்துவம், வேதியல் உள்ளிட்டா துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த புரிதலை மேம்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் தொழிலாளர்களின் சந்தை விளைவுகள் பற்றிய புரிதலை தனது ஆய்வின் மூலம் மேம்படுத்தியுள்ளார் இவர் என்பதும் அதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.