1. Home
  2. தமிழ்நாடு

உலகப் பொருளாதார மாநாட்டில் இருந்து, தமிழக அரசு வெறும் கையுடன் திரும்பி வந்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை - அண்ணாமலை கிண்டல்..!

Q

கோவையில் 2 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்ட எஜூடெக் நிறுவனம் ஒன்று, எந்த விதமான அறிவிப்பும் தராமல் திடீரென மூடப்பட்டு விட்டது. ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வேலை நீக்கத்துக்கான பணப்பலன்கள் வழங்கவில்லை. சம்பள பாக்கியை கூட வழங்கவில்லை.

தமிழக தொழில் துறை அமைச்சர், தமிழகத்துக்கு புதிதாக முதலீடு எதையும் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவில்லை.சமீபத்தில் இரண்டு நிறுவனங்கள், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு துபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு இன்னும் வந்து சேராத நிலையில், டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் இருந்து தமிழக அரசு வெறும் கையுடன் திரும்பி வந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like