1. Home
  2. தமிழ்நாடு

திமுக வெளியிடும் பட்ஜெட் இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை - அண்ணாமலை விமர்சனம்..!

1

 2025 சட்டமன்ற பேரவையில் நிதியமைச்சர் அமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்தார்.

மதுரை பெரியார் பேருந்து, மாட்டுத்தாவணி, நிலையத்தில் LED வாகனத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதேபோல் ஊராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு பட்ஜெட் நேரலை செய்யபப்ட்டது.  ஆனால் நிதிநிலை அறிக்கையை காண பொதுமக்கள் தயாராக இல்லை . பல இடங்களில் நிதி நிலை அறிக்கையை பார்ப்பதற்காக போடப்பட்ட சேர்கள் ஆட்கள் இன்றி காணப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை என கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like