1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை..!

1

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை என்று குடிநீர் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in  என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

Trending News

Latest News

You May Like