1. Home
  2. தமிழ்நாடு

எந்த அணியும் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை... கடைசியில் ஆகாஷ் அம்பானி கொடுத்த ட்விஸ்ட்!

1

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக தம்முடைய கேரியரை துவங்கியுள்ளார். ஆனால் ஜாம்பவானின் மகன் என்பதால் சீக்கிரம் வாய்ப்பு கொடுத்து விட்டார்கள் என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவே மும்பை அணி நிர்வாகம் அவரை 2021, 2022 சீசன்களில் முழுமையாக பெஞ்சில் அமர வைத்தது.

அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பையிலிருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடத் துவங்கினார். அந்த வாய்ப்பில் 2023 ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய அவருக்கு ஒரு வழியாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் 120 – 130கி.மீ என்ற சாதாரண வேகத்தில் வீசிய அவரை பஞ்சாப் வீரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

அதனால் சச்சின் டெண்டுல்கரின் திறமையில் பாதி கூட இவருக்கு இல்லை என்று பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்த வேகத்தை வைத்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் காலம் தள்ள முடியாது என்றும் ரசிகர்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் டாக்டர் கே திம்மப்பையா நினைவு உள்ளூர் தொடரில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். அந்தத் தொடரில் கர்நாடக வாரியம் மற்றும் கோவா அணிகள் ஒரு போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 36.5 ஓவரில் வெறும் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோவா அணிக்கு அதிகபட்சமாக அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓவரில் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அதன் பின் விளையாடிய கர்நாடக அணி மீண்டும் சுமாராகவே பேட்டிங் செய்து 30.4 ஓவரில் 121 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு எதிராக மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கர் 30.4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் மொத்தமாக அவர் 87 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து கோவா இன்னிங்ஸ் மற்றும் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

அதனால் தம்மை கிண்டலடித்தவர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் சிறிய பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்தவொரு அணியும் முனைப்பு காட்டவில்லை. இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் இடைவெளி விடப்பட்டது. இடைவெளிக்குப் பின், நடைபெற்ற இரண்டாவது சுற்று ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படைத் தொகையான ரூ. 30 லட்சம் தொகைக்கு அவரை ஏலத்தில் எடுத்துக் கொண்டது மும்பை இந்தியன்ஸ்.

Trending News

Latest News

You May Like