1. Home
  2. தமிழ்நாடு

வேலை நேரத்தில் சொந்த வேலையாக ஆசிரியர்கள் எவரும் வெளியே செல்ல அனுமதி கிடையாது..!!

வேலை நேரத்தில் சொந்த வேலையாக ஆசிரியர்கள் எவரும் வெளியே செல்ல அனுமதி கிடையாது..!!


விருதுநகர் மாவட்டம் முத்தார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீரென பார்வையிட்டார்.

அப்பொழுது பள்ளி தலைமை ஆசிரியர் தற்செயல் விடுப்பிலும், பொறுப்பு தலைமை ஆசிரியரும் பள்ளியில் இல்லாதது கண்டறியப்பட்டது. பிற ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராமலும், பள்ளிக்கு வந்ததும் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடாமலும் முழுமையாக வருகை பதிவேட்டை முடியாமலும் இருந்துள்ளனர்.

பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இல்லை. ஆசிரியர்கள் எவரும் பொறுப்பாக கவனிக்காமல் பள்ளி மாணவர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்துள்ளனர். இவை அனைத்தும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் பொறுப்பற்ற செயலாகும் என தெரிவித்துள்ளார்.

எனவே, இனிவரும் காலங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறையில் இருந்தாலும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் பள்ளியை பொறுப்பெடுத்து, முழுமையாக வருகைப் பதிவேட்டை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எவரும் சொந்த வேலையாக பள்ளி வேலை நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கிடையாது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் செய்ய வேண்டும். மாணவர்கள் நலன் கருதி கொரோனோ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை சரிவர கவனிக்கவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like