மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது..!

நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் விதிகளை மீறி தனியார் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
கோடை விடுமுறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என அவர் கூறியுள்ளார்.