1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் ஆன்லைன் வகுப்பு சோகம்.. கல்லூரி மாணவி செயலால் பெற்றோர் அதிர்ச்சி !

தொடரும் ஆன்லைன் வகுப்பு சோகம்.. கல்லூரி மாணவி செயலால் பெற்றோர் அதிர்ச்சி !


மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார் மாணவி ஜெயந்தி பவுலி(20). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கல்லூரிக்கு பீஸ் கட்ட கூட போராடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதால் அதில் பங்கேற்க முடியவில்லை. வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாததே இதற்கு காரணம். அதனை வாங்கிதரும்படி அவர் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பெற்றோர்கள் பணம் கிடைக்கும்போது வாங்கிக்கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது. ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

தொடரும் ஆன்லைன் வகுப்பு சோகம்.. கல்லூரி மாணவி செயலால் பெற்றோர் அதிர்ச்சி !

இந்நிலையில்  இரவில் வீட்டில் பெற்றோர்  இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை அதிகரித்து வருவதால் அதிருப்தி எழுந்துள்ளது. 

newstm.in 

Trending News

Latest News

You May Like