சாலை வசதி இல்லை... ஆற்றில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்லும் மக்கள்!

சாலை வசதி இல்லை... ஆற்றில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்லும் மக்கள்!

சாலை வசதி இல்லை... ஆற்றில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்லும் மக்கள்!
X

மயான கொட்டகைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் சடலத்தை ஆற்றில் இறங்கி தூக்கிச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் மயான கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான சாலை வசதி இன்று வரை அமைத்து தரப்படவில்லை. இந்நிலையில் இன்று கமுகக்குடி பகுதியை சேர்ந்த கீதா என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். சாலை வசதி இல்லாததால் அவரின் உடலைத் தூக்கிச் சென்றவர்கள் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கியும், குறுவை சாகுபடி செய்த வயலில் பயிர்களை மிதித்தும் சென்றனர்.


இது குறித்து பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தும் போது மட்டும் அதிகாரிகள் வந்து அந்தப் பகுதியை பார்த்துச் செல்வார்கள் என்றும் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it