1. Home
  2. தமிழ்நாடு

இனி 5, 8, 9, 11 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை..!

1

கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைமுறையை கொண்டு வர முடிவு செய்தனர். இதையடுத்து செப்டம்பர் 2023ல் 9 மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை அறிமுகம் செய்தனர். நடப்பு கல்வியாண்டின் இறுதி நெருங்கி விட்டதால் மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு அட்டவணையையும் வெளியிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதன் விசாரணையின் போது, RTE எனப்படும் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009ன் படி தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீட்டு மாடலுக்கு எதிரான நடைமுறையாக புதிய பொதுத்தேர்வு அறிவிப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் மத்தியில் அச்சம், கவலையை ஏற்படுத்தும். பள்ளிக்கு செல்வதற்கே மாணவர்கள் தயக்கம் காட்டுவர் என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா திக்‌ஷித் தலைமையிலான ஒரு நீதிபதி கொண்ட அமர்வு விசாரித்தது.

இதில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 5, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like