1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் வருவாய் குறைவதில் பிரச்சினைகள் ஏதும் இல்லை: அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் வருவாய் குறைவதில் பிரச்சினைகள் ஏதும் இல்லை: அமைச்சர் முத்துசாமி ..!

1

தமிழகத்தில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது என்று முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த சட்ட விரோத பார்களும் மூடப்பட்டன.

இதன் காரணமாக, டாஸ்மாக்கில் தினசரி வருவாய் ரூ.35 கோடி வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால், தற்போது ரூ.110 முதல் ரூ.120 கோடி தான் தினசரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பணியாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதுதான் எங்களின் முதல் நடவடிக்கை. டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை, வங்கி அதிகாரிகள் நேரடியாக வந்து வாங்கிக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உரிமம் உள்ளவர்கள் மட்டும்தான் பார் நடத்த முடியும். உரிமம் பெற்றவர்கள் விதிகளை பின்பற்றிதான் நடத்த வேண்டும். அதிகாரிகள் இதைக் கண்காணித்து வருகிறார்கள். உரிமம் இல்லாமல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருமானத்தை அதிகரிப்பது நோக்கமல்ல, தவறான பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பதுதான் நோக்கம். குடிப்பதை நிறுத்தி, அதனால் வருமானம் குறைந்தால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. டெட்ரா பாக்கெட் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். டாஸ்மாக் கடைக்கான நேரத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை. டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like