1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை : டிஜிபி சங்கர் ஜிவால்..!

1

தமிழகத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, "வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.

  • விநாயகர் சிலைகளை வைக்க போலீஸ் உதவி கமிஷனர் ஆர்டிஓ அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  • தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிருவப்பப்படும் சிலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி உடன் சிலைகள் வைப்பது அவசியம்.
  • மேலும் ஒலிபெருக்கியில் வைப்பதற்கு காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். 
  • மின்சாரம் பெறுவதற்கான விபரத்தையும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.
  • விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
  • பிற வழிபாட்டுத் தலங்கள் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது.
  • மற்ற மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பக் கூடாது.
  • விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க கூடாது
  • மேலும் காவலர்துறை அதிகாரிளுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், விநாயகர் சிலைகளை மினி லாரி டிராக்டர் மூலம் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டி மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லக்கூடாது.
  • சமூக விரோதிகள் விநாயகர் சிலைகளை சேதப்படுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும். பதற்றமான இடங்களில் சிலைகள் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அங்கு சிலைகளை வைத்து அனுமதிக்க கூடாது.

மசூதிகளில் தொழுகை நேரங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. மேலும் பதற்றமான பகுதிகள் வழியாகவும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது மற்ற வழிபாட்டு தலங்களை ஊர்வலம் கடந்து செல்லும்போது மேளதாளங்களை இசைக்கவும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதிக்க கூடாது.

ஊர்வலம் செல்லும் பாதையில் உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதையும் கொடிகள் கட்டுவதையும் அனுமதிக்க கூடாது. பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like