1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை யாரும் நிறுத்த வேண்டாம் - மெட்ரோ நிர்வாகம்..!

1

பெஞ்சல் புயலை எதிர்கொள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்கள் தயாராகி விட்டன. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்.
 

இந் நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கவனிக்க வேண்டிய சில அறிவுறுத்தல்களை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறி உள்ளதாவது;
 

* சென்னையில் இன்று (நவ.30) வழக்கம் போல், காலை 5.30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது.

* வழக்கமான ரயில் சேவை எவ்வித தாமதம் இன்றி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் தங்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளலாம்.
 

* மழை என்பதால் படிக்கட்டுகள், நடக்கும் வழித்தடங்களை பயணிகள் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
 

*கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் ஏரியாவில் மழைநீர் தேங்கக்கூடும் என்பதால் இன்று முதல் (நவ.30) பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். பார்க்கிங்கை பயன்படுத்துவது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை இதே நிலை நீடிக்கும்.
 

* ஏதேனும் உதவி வேண்டுவோர் 1800 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவி கோரும் பெண்கள் 155370 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like