1. Home
  2. தமிழ்நாடு

மக்களே யாரும் சீனாவில் பரவும் வைரஸ் குறித்து பீதி அடையத் தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!

1

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது முகநூல் பக்கத்தில், சீனாவில் கண்டறியப்பட்ட எந்தவொரு வைரஸும் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவக்கூடியதாக இதுவரை எந்த அறிக்கையும் இல்லை. இதுகுறித்து மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தற்போது பீதி அடையத் தேவையில்லை. மக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

சீனாவில் ஹெச்எம்பிவி தீநுண்மி வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடயே ஹெச்எம்பிவி பரவலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக வெளியாகும் தகவலை அந்நாடு மறுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like