1. Home
  2. தமிழ்நாடு

இனி ஓட்டுநர் உரிமம் வாங்க ஆர்டிஓ போக தேவையில்லை..! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!

1

பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓஅலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.ஆனால் தற்போது அதற்கு மாறாகவேறு ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1ம் தேதியில் இருந்து இந்த முறை செயல்பாட்டுக்கு வரும். அப்போது இந்த முறையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?
கற்றல் உரிமம் (LLR) ரூ.200, கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal) ரூ.200, சர்வதேச உரிமம் ரூ.1000, நிரந்தர உரிமம் ரூ.200 லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://parivahan.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு செல்லவும். இதில் முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்யவும்.விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள். படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.
இது ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், உங்கள் ஓட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும். விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின், உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.


டிரைவிங் ஸ்கூலுக்கு என்ன தகுதி?
தனியார் பயிற்சி மையங்கள் ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்க தகுதி பெறவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனத்திற்கு லைசென்ஸ் கொடுக்க அனுமதி வேண்டும் என்றால் மேலும் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.தனியார் ஒட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். இதைத்தவிர பயிற்சியாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பயோமெட்ரிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் அடிப்படைகளை பயிற்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

லைட் வெயிட் வாகனப் பயிற்சியை 4 வாரங்களில் (குறைந்தபட்சம் 29 மணிநேரம்) முடிக்க வேண்டும்.தியரி மற்றும் பிராக்டிகல் என இரண்டு வகையாக கற்பிக்க வேண்டியது அவசியம்.இதில், தியரி பிரிவு 8 மணி நேரமும், நடைமுறை 21 மணி நேரமும் இருக்க வேண்டும். கனரக மோட்டார் வாகனங்களுக்கு, 38 மணிநேர பயிற்சி இருக்கும். இதில் 8 மணிநேர கோட்பாட்டு கல்வி மற்றும் 31 மணிநேர நடைமுறை தயாரிப்பு ஆகியவை அடங்கும்.இந்த பயிற்சி 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும். ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு போகாமல் தனியார் பயிற்சி மையங்களில் நம்மளால ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும்.

Trending News

Latest News

You May Like