1. Home
  2. தமிழ்நாடு

விசா தேவையில்லை..! இந்த 4 நிபந்தனைகளுடன் இந்தியர்கள் பயணம் செய்யலாம்..! எந்த நாட்டிற்கு தெரியுமா ?

1

ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை, 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 

சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் ஈரான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.. அப்படி வரும்போது அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் 15 நாட்களுக்கு பிறகு கால நீட்டிப்பு கிடையாது.

 விசா இன்றி பயணம் என்ற நடைமுறையானது, சுற்றுலா வருவோருக்கு மட்டுமே பொருந்தும்.   அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் ஈரானில் தங்குவதற்கு விரும்பினாலோ அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ அதற்கான உரிய விசா பெற வேண்டும்.

விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like