இனி எஸ்.பி முதல் ஐ.ஜி அலுவலகங்கள் வரை பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது - அரசு அதிரடி..!

பெண் காவலருக்கு டிஐஜி மகேஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த விசாகா (Vishaka) கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் காவலர்களின் பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையிலான காவல் அதிகாரிகள் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது. காவல் அதிகாரிகள், அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரை உடனே வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.