இனி அனுமதியின்றி ஒரு வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம்..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிரியார் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், குடியிருக்கும் வீட்டைப் பிரார்த்தனை மண்டபமாக மாற்றக் கூடாது என்றும், இதற்கு அனுமதியில்லை எனவும் வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், வீட்டில் நடத்தப்படும் பிராத்தனைகாக ஒலிபெருக்கி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி ஒரு வீட்டைப் பிரார்த்தனைக் கூடமாக மாற்ற முடியாது என்றும் வீட்டில் பிரார்த்தனை செய்ய மாட்டேன் என்று மனுதாரர் உத்தரவாதம் அளித்தால், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோர் சீலை அகற்றலாம் என உத்தரவிட்டார்.
மேலும், உத்தரவை மீறி பிரார்த்தனை செய்தால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணையிட்டார்.