இனி க்ளாமர் கிடையாது! யு டர்ன் எடுக்கும் கமல் மகள்!

நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சினிமாவிற்கு வந்து 12 வருடங்களை கடந்து விட்ட நிலையில் ஸ்ருதி ஹாசனுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிப் படங்களில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் தற்பொது கமர்ஷியல் படங்களுக்கு முழுக்கு போட இருப்பதாகவும் இனி தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிளாக்பஸ்டர் படங்களைத் தவிர்த்து இனி நேர்மையான ஸ்கிரிப்ட்களை மட்டுமே தேர்வு செய்ய இருப்பதாகவும், நட்சத்திரக் குழந்தையாக இருப்பது தொழில் துறையின் கதவைத் திறக்கும் திறவு கோளாக இருப்பதாகவும் நெகிழ்ந்துள்ளார். லண்டனில் அவரது இசையை மக்கள் ஆர்வமாக விரும்பி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனது திறமையை நிரூபிக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி தேஜாவுடன் ஸ்ருதி இணைந்து நடித்திருக்கும் கிராக் படம் திரையரங்கிற்காக காத்திருப்பதாகவும், பவன் கல்யாணின் வக்கீல் சாப் படப் பிடிப்பும் தற்போது தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் படமும் திரையரங்கிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.