இனி ரயில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்!
ரயில் பயணிகளிடம் இனி ரயில் கட்டணம் தவிர ரயில் நிலைய பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில் சிறிய தொகை வசூலிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 7 ஆயிரம் பெரிய ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், அதில் 700 முதல் 1050 ரயில்நிலையங்களில் ரயில் கட்டணத்தில் சிறிது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இக்கட்டணம் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக வசூலிக்கபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த கட்டண உயர்வு 50 நவீனப்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.2021 ஆண்டு இறுதிக்குள் 50 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட இருப்பதால் இந்த நடைமுறை வர உள்ளதாக தெரிகிறது.
7000 ரயில் நிலையங்களில் 10 முதல் 15 சதவிகித ரயில் நிலையங்களில் மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக பயணிகளுக்கு சுமை எதுவும் இருக்காது என்றும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
newstm.in