இனி யானை பலி ஏற்படாது..! தண்டவாளத்தில் ஏ ஐ கேமரா அமல்படுத்தப்பட்டது..!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பான முறையில் கடக்க வேண்டும் என ஏஐ கேமரா கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பொருத்தப்பட்டது. பிப்ரவரி முதல் தற்போது வரை 2500 முறை யானைகள் பாதுகாப்பான முறையில் தண்டவாளங்களை கடந்துள்ளது.
12 டவர்களில்24 தெர்மல் பொருத்தப்பட்டது. ஆப்டிகல் கேமரா மூலம் 5011முறை அலார்ட் பெறப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற திட்டம் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காட்டு யானை மற்றும் சிறுத்தைகள் சாலைகளில் உலா வருவதினால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
வால்பாறை சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும் பொழுது காட்டு யானைகள் வழிமறித்து நிற்பதினால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோவையில் குறிப்பாக தொண்டாமுத்தூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகின்றது. வீடுகளையும் சேதப்படுத்தி வருவதினால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்