1. Home
  2. தமிழ்நாடு

இனி இரவு 11 முதல் ரயில்களில் மொபைல் போன் சார்ஜிங் வசதி இருக்காது..!

Q

ரயில்வே வாரிய உத்தரவின்படி, ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில், ரயில் பெட்டிகளில் மொபைல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயின்ட்களுக்கு, மின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இது, கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

எனினும், சமீப காலமாக ரயில் பெட்டிகளில், 'சார்ஜிங் பாயின்ட்' வேலை செய்யவில்லை' என, பயணியர் சிலர் ரயில்வே உதவி எண்ணுக்கும், செயலிக்கும் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளத்தில் புகாராக எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், '2014ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயின்ட்களுக்கு, இரவு 11:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்றனர்.

Trending News

Latest News

You May Like