1. Home
  2. தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் கிடையாது.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!

மெகா தடுப்பூசி முகாம் கிடையாது.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்களுடன் இணைந்து வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like