என்ன விமர்சனம் கேலி, கிண்டல் வந்தாலும் சரி... மாணவர்கள் பக்கம் தொடர்ந்து நான் நிற்பேன்..!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பரப்புரையின்போது நீட் ரத்து செய்யப்படும் என உறுதி கொடுத்தேன். உண்மைதான். ஆனால் அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன். மக்களும் ஏற்க வேண்டும். நீட் பிரச்சனை, மக்கள் போராட்டமாக மாற வேண்டும். என்ன விமர்சனம், கேலி, கிண்டல் வந்தாலும் சரி அதுகுறித்து கவலை இல்லை. மாணவர்கள் பக்கம் தொடர்ந்து நான் நிற்பேன்.
நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களை ஏமாற்ற மாட்டேன். என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனக் கூறினார்.