1. Home
  2. தமிழ்நாடு

என்ன தான் கோபம் வந்தாலும் இப்படியா ? கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..!

11

மதுரையை சேர்ந்தவர் செந்தில்குமார் (32 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலதி (28 வயது). இவர் கள்ளந்திரியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்வது செந்தில்குமாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். ஆனால் மாலதி அதை கேட்காமல் தினசரி வேலைக்கு சென்று வந்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாலதி, செந்தில்குமார் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதில் செந்தில்குமார் உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த நிலையில், அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 40 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like