ஜன.10 ஆம் தேதி வரை பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை..!!

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி,
அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை,
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.
பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி.