1. Home
  2. தமிழ்நாடு

நாளை விடுமுறை இல்லை - திடீர் பல்டி அடித்த டெல்லி எய்ம்ஸ்..!

Q

அயோத்தியில் நாளை ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெறுவதால் பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையும் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் செயல்பட்டன. பெரும்பாலான வங்கிகள் விடுமுறை அறிவித்துள்ளன. ஒன்றிய அரசு அலுவலங்கள் அரைநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை உட்பட மற்ற அரசு மருத்துவமனைகளில் நாளை மதியம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவசர அறுவை சிகிச்சைகள் பிரிவுகள் தவிர மற்ற பிரிவுகள் செயல்படாது என்று கூறப்பட்டது. மருத்துவமனைகளின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
அதனால், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை எய்ம்ஸ் வாபஸ் பெற்றது. அதனால் மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும் என்று மறு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like