தப்பிக்க முடியவில்லை, உணவுக்கும் வழியில்லை - ஊரடங்கால் சரணடைந்த கொலைக் குற்றவாளிகள்!

தப்பிக்க முடியவில்லை, உணவுக்கும் வழியில்லை - ஊரடங்கால் சரணடைந்த கொலைக் குற்றவாளிகள்!

தப்பிக்க முடியவில்லை, உணவுக்கும் வழியில்லை - ஊரடங்கால் சரணடைந்த கொலைக் குற்றவாளிகள்!
X

வேலூரில் உணவுக்கும் வழியில்லை, தப்பிக்கவும் முடியவில்லை என்பதால் கொலைக்குற்றவாளிகள் 4 பேர் போலீஸில் சரண் அடைந்துள்ளனர்.

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த உதயக்குமார் என்பவர் உறவுக்கார பெண் ஒருவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் உதயக்குமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் இம்மானுவேல், நவின்குமார், நிர்மல், அந்திரியாஸ் ஆகிய 4 பேரும் வேலூர் தெற்கு காவல் துறையினரிடம் சரணடைந்தனர். கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களால் வேலூரை வீட்டு வெளியே செல்லமுடியவில்லை. மேலும் சாப்பிடுவதற்கு உணவகங்கள், கடைகள் எதுவும் இல்லாததால் உணவின்றி தவித்துள்ளனர்.


பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடு காவலர்களை வரவழைத்து சரணடைந்துள்ளனர். இதையடுத்து இவர்களை கைது செய்த காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it