1. Home
  2. தமிழ்நாடு

ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு !

ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு !


வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், 2021 - 22ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 விழுக்காடாக இருக்கும் என்றும் 2022 - 23ல் 17.2 விழுக்காடாக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு !

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வாட் வரி குறைப்பு நடவடிக்கையால் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் தேவை அதிகரித்திருப்பதாக கூறினார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 9வது முறையாக மாற்றமின்றி 4 சதவீதமாக தொடர்வதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவிகிதமாக தொடர்கிறது. 5ஆவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் பழைய அளவிலேயே தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like