1. Home
  2. தமிழ்நாடு

மருதமலை முருகன் கோவிலுக்கு காரில் செல்ல அனுமதி இல்லை..!

1

முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும்  மருதமலை முருகன் கோவில் கோவை நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை கோவில் அமைந்துள்ள நிலையில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதினால் மருதமலை முருகன் கோவில் என அழைக்கப்படுகின்றது.

இந்த கோவிலிற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தரும் நிலையில் தமிழகம் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் முருகப்பெருமானிற்கு உகந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படுகின்றது.

மருதமலை முருகன் கோவிலில் மலை மீது சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மூன்று பேருந்துகள் கோவில் நிர்வாகம் சார்பாக தினம்தோறும் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு மருதமலை கோவில் அடிவாரத்தில் இருந்து கோவில் வரையுள்ள மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.பக்தர்களின் கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மலைப்பாதை படிக்கட்டுகள் அல்லது கோவில் பஸ் மூலம் பயணம் செய்து சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

Trending News

Latest News

You May Like