#BREAKING : தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - விஜய்..!

தவெக செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,
தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும். திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றார்.