1. Home
  2. தமிழ்நாடு

யாருடனும் கூட்டணி இல்லை : தனித்து போட்டியிடும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்..!

1

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி கடந்த வாரம் பேட்டி ஒன்றில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில்  பா.ஜ.க.வுடன் இணைந்து மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் செயல்படும் என்று தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மையும், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க சாத்தியம் உள்ளது என்பது போல் தெரிவித்து இருந்தார்.

எச்.டி.குமாரசாமி
இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கைகோர்க்கும் என்ற ஊகங்களை தூண்டியது. இந்நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.

எச்.டி.தேவகவுடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், மக்களவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும். நாங்கள் (மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்) ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். எங்கள் தொண்டர்களுடன் கலந்தாலோசித்த பிறகு நாங்கள் வலுவாக உள்ள இடங்களில் மட்டும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like