அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது !! நீதிமன்றம் உத்தரவு..

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது !! நீதிமன்றம் உத்தரவு..

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது !! நீதிமன்றம் உத்தரவு..
X

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கில் மத்திய அரசையும் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதனால், தகுதிநீக்கத்திற்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு மீதான முடிவு வரும் இதே நிலை நீடிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் இன்று காலை தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , மத்திய அரசையும் வழக்கில் சேர்க்ககோரி கடைசி நேரத்தில் சச்சின் பைலட் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தாமதமானது.

ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என்றும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் கூறியது. அசோக் கொலாட் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்துது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it