1. Home
  2. தமிழ்நாடு

எண்ணூர், தூத்துக்குடியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

எண்ணூர், தூத்துக்குடியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக மாறியதை அடுத்து எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை நெருங்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

அந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டது. சவுதி அரேபியா இம்முறை புயலுக்கு பெயரிட்டது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடற்பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். வங்கக்கடல், ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

எண்ணூர், தூத்துக்குடியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

ஜாவத் புயல் நாளை வடக்கு ஆந்திரா தொடங்கி தெற்கு ஒடிசாவுக்கு இடையே கரையை கடக்கும் என்பதால், ஆந்திரா, ஒடிசா கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியது.

இதனால் தமிழகத்தில் பெரியளவில் பாதிப்பு இருக்காது என கருதப்படுகிறது. இந்நிலையில் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எண்ணூர், தூத்துக்குடியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக மாறியதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே போல் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like