ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நித்தியானந்தா!!
கைலாசா என்ற நாட்டை உருவாக்க உள்ளதாக கூறி வந்த நித்தியானந்தாவின் வாழ்க்கையில் புயல் வீசிவிட்டது. தற்போது நித்தியானந்தா படுத்த படுகையாக உள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் உடல்நிலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆறு மாதங்களாக தூக்கமில்லாமல் சிந்தனையில் இருந்ததால் உடல் சோர்வடைந்து உள்ளதாகவும் , எதையும் தன்னால் சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டாலும் உடனே வாந்தி வருவதாக பதிவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் சில மணிநேரம் ஆக்சிஜன் உதவி இல்லாமல் சுவாசித்ததாகவும் பதிவிட்டுள்ளார். ஆக்சிஜன் உதவியுடன் படுக்கையில் இருக்கும் அளவிற்கு நுரையீரல் தொற்று ,கல்லீரல் தொற்று அவருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
நோய் தொற்று தீவிரமாக உள்ளதால் தான் அவரால் அமர்ந்து பேச முடியாத நிலை உள்ளதாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்லமுடியாமல் நித்தியானந்தா தவித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வீடியோ மட்டும் வெளியிட்டு வந்த நித்தியானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் கைலாசாவில் செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருமானம் இல்லாமல் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நித்தியானந்தா விரைவில் தேறி வர வேண்டும் என்று அவரது சீடர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in