பா.ஜ.க. நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் எடுக்கும் - நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!

சென்னையில் நடந்த ‘தி க்ரூக்கட் டிம்பர் ஆப் நியூ இந்தியா’ (The Crooked Timber of New India – Essays on a Republic in Crisis) என்ற புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரகலா பிரபாகர், நாட்டின் மதச்சார்பற்ற பன்மைத்துவ, ஜனநாயக ஆதாரங்களை மத்திய அரசு சீரழித்து வருகிறது. 13.5 கோடி இந்தியர்கள் பல பரிமாணத்திலான வறுமையில் இருந்து வெளியேறியுள்ளதாக மத்திய அரசு கூறியிருப்பது சந்தேகம் அளிக்கிறது.
‘மல்டிடைமன்சல் பாவர்டி’ எனப்படும் பல பரிமாணத்திலான வறுமை நிலைத் தொடர்பான நிதி ஆயோக் நடத்திய விமர்சனம் செய்துள்ள அவர், வருமான உயர்வை மட்டுமே மத்திய அரசு கணக்கில் கொண்டுள்ளது. ஆனால், மற்ற காரணிகளான சுகாதாரம், மக்களின் நிலை ஆகியவற்றை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என விமர்சித்தார். இருந்தாலும், வருமானத் தரவுகளும் எந்தவித ஏற்றமும் இல்லாமல் இருப்பதாக பிரகலா பிரபாகர் விமர்சித்து உள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னாள் உள்ள நிலைக்கூட திரும்பவில்லை. இப்படியான சூழலில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டதாக எவ்வாறு கூற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டாலும், அக்கட்சி நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என்று பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.