1. Home
  2. தமிழ்நாடு

நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது... நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்..!

1

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பிச்சை எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. 

நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே தி.மு.க.வின் கொள்கை. இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.   


 


 

Trending News

Latest News

You May Like