இடைக்கால பட்ஜெட் : பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறையாற்றிய பின் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
2022-2023 நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்கு பிந்தைய அரசாங்கம் மே அல்லது ஜீன் மாதத்தில் பதவியேற்க உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்திற்கான நிதி மேம்பாட்டை தக்கவைத்துக்கொள்ள இடைக்கால பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்ததொடர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.