1. Home
  2. தமிழ்நாடு

"களத்தை சந்திக்க நிர்மலா சீதாராமனுக்கு பயம்.." - ஆளூர் ஷாநவாஸ்..!

1

நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:- பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று  விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். 

மேலும், என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது” என நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது குறித்து விசிக எம்எல்ஏ-வான ஆளூர் ஷாநவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

களத்தை சந்திக்க பயம்!

Trending News

Latest News

You May Like