கொட்டி தீர்க்கும் கனமழை - நீலகிரியில் உதவி எண்கள் அறிவிப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அக்., 1ம் தேதி முதல் நவ., 3ம் தேதி வரை மழை இயல்பை விட 19% அதிகமாக பெய்திருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், தற்போது 301.1 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் விழுந்த பாறை கற்கள் அகற்றும் பணி நிறைவு பெறாததால், ஊட்டி மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Toll free - 1077,
0423-2450034,
0423-2450035
வாட்ஸ்அப்- +91 9943126000