1. Home
  2. தமிழ்நாடு

நீலகிரி தொகுதி.. பாஜக - அதிமுக இடையே தாக்குதல்.!

Q

நீலகிரி தனி தொகுதியில் மத்திய அமைச்சர் முருகன் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக முதலில் பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை ஆகியோர் வந்தனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர்.
இதற்கிடையே அதிமுகவினரும் வேட்பாளருடன் அங்கு வந்தனர். அவர்கள் பாஜக ஊர்வலத்தை கடந்து செல்ல முயன்றதால் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென போலீஸ் எஸ்.பி. வாகனம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். அப்போது பாஜகவினர் மீதும் தடியடி விழுந்தது.
சிறிது நேர தடியடிக்கு பிறகு தொணடர்கள் சிதறி ஓடினர். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் மீது தடியடி நடத்திய எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like