நீலகிரி மலை ரயில் இன்று ரத்து..!
கல்லார் – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு புறப்படவிருந்த ரயிலும், உதகை – மேட்டுபாளையம் இடையே இன்று பகல் 2 மணிக்கு புறப்படவேண்டிய ரயிலும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்டவாளத்தில் சரிந்துள்ள பாறைகள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, அவ்வப்போது வெயிலும் அடித்து வருகிறது.