பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்த நைஜீரியா.. சிறப்பு இதுதான்..!
பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடக்கும் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்த பயணத்தில் நைஜீரியா, பிரேசில், கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டார்.
அதன்படி பிரதமர் மோடி முதலில் நைஜீரியாவுக்கு சென்றுள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று நைஜீரியா புறப்பட்டார்.
இதற்கிடையே தான் பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நைஜீரியாவில் கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் எனும் விருது மிகவும் உயரியதாக உள்ளது. இந்த விருதை இதற்கு முன்பு மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கடந்த 1969ம் ஆண்டில் வழங்கப்பட்டது. உலகளாவிய தலைவர் என்பதை பிரதிநிதித்துவபப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி இன்று பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‛கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ாப் தி நைஜர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எலிசபெத் ராணிக்கு பிறகு இந்த விருதை பெற்ற 2வது வெளிநாட்டு பிரபலம் என்ற பெருமைக்கு பிரதமர் மோடி சொந்தக்காரராகி உள்ளார். வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார். இதுவரை வெளிநாடுகளில் 16 உயரிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் இது 17வது விருதாக அமைந்துள்ளது.