1. Home
  2. தமிழ்நாடு

நல்ல உருட்டு... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி ரகுராம்!

1

கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை ராம் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், பூத் ஏஜென்ட் இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும் என தெரிவித்துள்ளார்.வாக்காளர்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்றும் ஆனால் 1 லட்சம் பேர் பட்டியலில் இல்லாத வாக்காளர்கள் என தோராயமாக சொல்கிறார் என்றும் அனைத்து பாஜக வாக்காளர்கள் பெயர் மட்டுமே விட்டு உள்ளது என்றும் அடிச்சு விடுகிறார், நல்ல உருட்டவும் எனவும் நக்கலாக விமர்சித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like