நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை..!
என்ஐஏ அதிகாரிகள், தமிழகத்தின் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. அதேபோல், இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.