1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!

Q

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே பெருகுடா பகுதியில் சிலந்தி ஆறு ஓடுகிறது. இந்த சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தடுப்பணை கட்டப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனத்துக்கான தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படும். இதனால் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளா அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கேரளா அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை இன்று விசாரித்தது.

அப்போது கேரள அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில், ''சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெற்றால் மட்டுமே அத்திட்டத்தை தொடர அனுமதிக்க முடியும். உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்'' என உத்தரவிட்டதுi

Trending News

Latest News

You May Like