1. Home
  2. தமிழ்நாடு

தனியார் பேருந்துகளுக்கு அடுத்த ஷாக்..! இனி அதிக கட்டணம் வசூலித்தால்...

1

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன என்ற குற்றச்சட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதிக விலைக்குக் கட்டணத்தை உயர்த்தும் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பேருந்து நிறுவனமும் பொருட்படுத்துவதே கிடையாது என்பதுதான் உண்மை. பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தாலும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாகவே இருக்கிறது.

இது குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை நேரடியாகவும், சமூகவலைத்தளங்கள் மூலகமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அன்றைய நாளோடு மட்டும் பேசு பொருளாகி, அடுத்த கட்டண உயர்வின்போதுதன் மீண்டும் விவாதமாகிறது. இதற்கு ஒரு நிரந்திர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. 

இந்நிலையில் தனியார் பேருந்து அதிக கட்டணம் வசூல் குறித்து தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதாவது அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. 

சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராதத்தை ₹50,000 ஆக உயர்த்த திட்டம் என அரசுத் தரப்பில் இருந்து வாதம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like