1. Home
  2. தமிழ்நாடு

இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்..! திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ..!

1

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை திமுகவில் இணைத்து எடப்பாடி ஷாக் கொடுத்தனர்.இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார். 2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவராவார். கார்த்திக் தொண்டைமான் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார், பின்னர் திமுகவில் இணைந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார்.

 இவர் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் அதிமுகவின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவராகவும் இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டார். ஆனால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.இந்த நிலையில் புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகியான விஜயபாஸ்கருக்கும்- கார்த்திக் தொண்டைமான் இடையே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-அதிமுக கட்சி போகின்ற போக்கே சரியில்லை என்றும், அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்பதாலும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக கார்த்திக் தொண்டைமான் கூறினார்

தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்துடன், முதல்வர் மு.க ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் நன்றாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து கட்சி பணிகளையும், மாவட்ட கழகத்தில் இணைந்து நிச்சயமாக செய்ய தயாராக இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன் என்றார்.

Trending News

Latest News

You May Like