அதிமுகவில் அடுத்த பரபரப்பு.. ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை !

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்றுஅதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் வரும் 7ஆம் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கமாக இதுபோன்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்வது வழக்கம்.
ஆனால், இன்றைய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. மாறாக அவர் தனியாக ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் கே.பி முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in