மக்களுக்கு அடுத்த ஷாக்..!! பிப்.1 முதல் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு.!!
இப்போதெல்லாம் நாளுக்கு நாள் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே போகிறது. ஆகவே கட்டுமானம் சார்ந்த வேலைகளை தொடங்குவதற்கே அனைவரும் இப்போதெல்லாம் அதிகளவு தயங்குகின்றன.
இந்நிலையில், கட்டுமானப் பொருட்களில் விலையை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜல்லி, வெட்மிக்ஸ் ஒரு யூனிட்டுக்கு ₹3,000 மற்றும் போக்குவரத்து கட்டணம் ₹1,000 (10 கி.மீ.,). இதேபோல எம் சாண்ட் ₹4,000 மற்றும் போக்குவரத்து கட்டணம் ₹1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கனிமப் பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.